தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகர்-நடிகைகளின் நிலவரம்.!
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் நடிகைகள் வெற்றி-தோல்வியை சந்தித்துள்ளனர். மத்திய அமைச்சரும், முன்னாள் தொலைக்காட்சி நடிகையான ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
நடிகை ஹேமாமாலினி பாஜக சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிட்டு வென்றார்.
தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்த சன்னிடியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.
கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் களமிறங்கிய நடிகை சுமலதா, முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலை தோல்வியுறச் செய்துள்ளார்.
அதே நேரத்தில் பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா உத்தரப் பிரதேச மாநிலம் ராம்நகர் தொகுதியில் தோல்வியை அடைந்தார்.
பத்தேபுர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் ராஜ்பாபர், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் பட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சத்ருகன்சின்ஹாவும் தோல்வியை சந்தித்துள்ளார்.
பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார்.