குற்ற உணர்விலிருந்து விடுபட ஒருவாய்ப்பு ❗ இயக்குநர் சேரன் ட்வீட்
பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் சமீபத்தில் ‘திருமணம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நண்பர்களே. குற்ற ?உணர்விலிருந்து விடுபட ஒருவாய்ப்பு. ‘திருமணம்’ படம் தியேட்டர்ல பாக்க முடியல அதுனால பைரசில பாத்தேன்னு சொல்றவங்க அதற்கான தொகையை இந்த அக்கவுண்ட்க்கு அனுப்பவும்” என்று தயாரிப்பாளரின் வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டுள்ளார்.