Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கொரில்லா திரைப்பட இசை வெளியீட்டு விழா

Posted on May 24, 2019May 24, 2019 By admin No Comments on கொரில்லா திரைப்பட இசை வெளியீட்டு விழா

குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது.

சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது,

“இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்குத் தெரியும். மிக நன்றாக வந்திருக்கிறது படம். ஜீவா சாரோடு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. கொரில்லா டீமுக்கு வாழ்த்துகள்” என்றார்

இயக்குநர் கண்ணன் பேசியதாவது,

 

” இந்தப்படம் மீது எல்லோருக்குமே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜீவா என் இயக்கத்தில் வந்தான் வென்றான் படத்தில் நடித்த போது சந்தானம் சாருக்கு நிறைய ஸ்கோப் கொடுத்திருந்தார். அந்த நல்லமனது அவருக்கு உண்டு. ஒரு அனிமலை வைத்து படமெடுப்பது பெரிய கஷ்டம். அதைச் சிறப்பாகச் செய்திருப்பதற்கு பெரிய வாழ்த்துகள். நிச்சயம் இந்தப்படம் பெரிய வெற்றி அடையும்” என்றார்

நடிகர் ராதாரவி பேசியதாவது,

“என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன் யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது,

“கொரில்லா என் நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு மிகவும் நல்லாருக்கு என்று சொன்னார். படம் நல்ல வியாபாரம் ஆகி இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஜீவா தயாரிப்பாளர்களுக்கான நடிகர். அவர் நினைத்தால் வருசத்திற்கு நான்கு படம் நடித்துவிட்டு ப்.போகலாம். ஆனால் ஆண்டுக்கு நான்கு தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இயக்குநருக்கு வாழ்த்துகள். புதிய கான்செப்டில் குழந்தைகளுக்கு பிடித்து மாதிரி படம் எடுத்து இருக்கிறார்கள். சரியான நேரத்தில் படம் வெளிவருகிறது” என்றார்

இயக்குநர் விஜய் பேசியதாவது,

“கொரில்லா டீம் புதிய எனர்ஜியோடு வந்திருக்கிறார்கள். கண்டிப்பா பெரிய அளவில் ரீச் பண்ணுவாங்க என்று நம்புறேன். ஜீவா கிரேட் ஆக்டர். ரொம்ப நேச்சுலர் ஆக்டர். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். சாம்.ஜி எஸ் என்ன கேட்டாலும் எந்த நேரத்தில் கேட்டாலும் எனர்ஜியாக பேசுவார். சதிஷ் இந்தப்படத்தில் கலக்கி இருக்கிறார். அவர் தவிர்க்க முடியாத நடிகராக மாறி வருகிறார்” என்றார்

ஆர்.பி செளத்ரி பேசியதாவது,

“ட்ரைலர் பார்த்தேன் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய லக்கி. படத்தை இப்போதே விற்பனை செய்துவிட்டார். கண்டிப்பா இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். பாடல்கள் விஷுவல்ஸ் இரண்டும் நன்றாக இருந்தது. ஜீவாவிற்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்” என்றார்

இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது,

“பர்ஸ்ட் ஜீவா சார். ஜீவா சாருக்கு ஜிப்ஸி படத்தில் பெரிய டாஸ்க். அதையெல்லாம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகச் செய்திருந்தார். ஜீவா மாதிரி ஒரு ஆர்டிஸ்ட் இல்லை என்றால் ஜிப்ஸி எடுத்திருக்க முடியாது. கொரில்லா படம் டோட்டல் கான்ட்ரஸ்ட். அதிலும் கலக்கி இருக்கிறார். இந்த எலெக்‌சன் டென்சன் எல்லாத்தையும் இந்தப்படத்தின் ட்ரைலர் பாடல்களும் போக்கி விடுகிறது. சாம் சி எஸ் தற்போது அவர் ஏற்கும் படங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார்” நன்றி

இயக்குநர் கார்த்தி பேசியதாவது,

 

“டான் சாண்டி இந்தப்படத்தில் சோசியல் கண்டெண்ட் ஒன்று வைத்திருக்கிறார். எல்லா ஜானர்லயும் படம் செய்யும் ஒரு நடிகர் ஜீவா. ரொம்ப ரேரான நடிகர் அவர். மொத்த குழுவிற்கும் நன்றி” என்றார்

ராகுல் தாத்தா பேசியதாவது,.

“இந்தப்படத்துல நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். கொரில்லாட்ட அடி வாங்காத ஆட்களே கிடையாது. அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு என்ன தேவையோ அனைத்தையும் செய்து கொடுத்தார் தயாரிப்பாளர். இந்தப்படம் ஓகோன்னு ஓடணும். இந்தக்காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள். இந்த இயக்குநர் டான் கிடையாது டானுக்கு எல்லாம் டான். சாம் சி எஸ் பிரம்மாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப்படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்” என்றார்

இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசியதாவது,

“படத்திற்கு என்ன தேவையோ அதையெல்லாம் தயாரிப்பாளர் செய்து கொடுத்திருக்கிறார். ஜீவா சார் மிக அற்புதமான நடிகர். இந்தப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்

பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது,

 

“ஆர்.பி செளத்ரி தமிழ்சினிமாவில் 22 பாடலாசியர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 56 இயக்குநர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் அறிமுகப்படுத்தியதிலே மிகச்சிறப்பானவர் ஜீவா. சாம் சி எஸ் நல்ல பாடல்கள் எழுதக்கூடிய இசை அமைப்பாளர். அவரை நான் மனதார வாழ்த்துகிறேன். இயக்குநர் டான் சாண்டி 20 வருடங்களாக எனக்குத் தெரிந்த தம்பி. தொடர்ச்சியாக கதையோடும் வாழ்க்கையோடும் போராடிக் கொண்டிருந்தார். இந்தப்படம் அவருக்கு பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும்” என்றார்

இயக்குநர் டான் சாண்டி பேசியதாவது,

 

“தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்ததிற்காக நன்றி. இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை நான் கற்றது தமிழில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்படம் இல்லை. இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக்குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடைய வேண்டும்” என்றார்

இசை அமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது,

 

“முன்னாடியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் இது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்தப் படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப்படத்தைப் பார்த்தால் நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அவை நன்றாகவும் இருந்தது. இந்தப்படம் எனக்கு மிக புதுமையாக இருந்தது. பாடலாசியர்கள் யுகபாரதி, லோகன் இருவரும் நன்றாக பாடல் எழுதி இருக்கிறார்கள். இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய மியூசிக் டீம் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்தப்படத்தில் நிறைய அரசியல் நய்யாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்” என்றார்

நடிகர் சதிஷ் பேசியதாவது,

“இந்தப்படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அதுகூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது. ஒவ்வொருத்தரும் படத்தை என்சாய் பண்ணி நடித்திருக்கோம். இயக்குநர் டான் சாண்டி அவர் சொன்னதைச் செய்தாலே போதும். அவருக்கு காமெடி அப்படி வரும்.” என்றார்

நடிகர் ஜீவா பேசியதாவது,

” கொரில்லா படம் ஒரு எக்ஸ்டானரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன் இந்தப்படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால் தான். இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியா ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். கொரில்லா மாதிரி ஒருபடம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. இந்தமாதிரி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளருக்கு மறுபடியும் ஒரு நன்றி. டான் சாண்டி இந்தக்கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்சாய் பண்ணிக்கேட்டேன். படத்தையும் என்சாய் பண்ணி நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும். யுகபாரதி சாருக்கு நன்றி. அவர் எனக்கு நல்லநல்ல பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்.” என்றார்

தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா,

“இந்தப்டத்தை பண்ணும் போது குரங்கை வைத்து பண்ணாமல் சிம்பான்ஸியை வைத்து எடு என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னார். சாண்டி சிறப்பாக படத்தை எடுத்து இருக்கிறார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்

இந்த விழாவில் அழிந்து வரும் உயிரினமான சிம்பான்ஸி இரண்டை திரைப்படக்குழு தத்தெடுத்தது. படம் வரும் ஜுன் மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Cinema News

Post navigation

Previous Post: டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் பிரிவில் மேரி கோம் தங்கம்!!!!
Next Post: கன்னி மாடம் படத்தின் சிறப்பு

Related Posts

தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த நடித்த காட்சி Cinema News
சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் Cinema News
Herewith i forward the press release pertaining to "NTR 31" Herewith i forward the press release pertaining to “NTR 31” Cinema News
Ram Gopal Varma's ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ Cinema News
நடிகர் கார்த்தியின் திப்புசுல்த்தான் படப்பிடிப்பில் அரசியல் காட்சிகள் சமூகஆர்வலர்கள் ரகளை நடிகர் கார்த்தியின் திப்புசுல்த்தான் படப்பிடிப்பில் அரசியல் காட்சிகள் சமூகஆர்வலர்கள் ரகளை Cinema News
பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட அப்டேட் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட அப்டேட் ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme