லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் நிலையில் உள்ளது. மதியம் 2மணி நிலவரப்படி அக்கட்சி மொத்தம் தனியாக 301 இடங்களில் முன்னிலையில் உள்ளது . கூட்டணியாக மொத்தம் 349 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்து விட்டீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.