Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பணக்கார பெண் வேட்பாளர் 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்

Posted on May 23, 2019May 23, 2019 By admin No Comments on பணக்கார பெண் வேட்பாளர் 724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

542 தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 7 ஆயிரத்து 928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 724 வேட்பாளர்கள்தான். அதாவது பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தை விட குறைவு.

தேசிய கட்சிகளில் காங்கிரஸ் கட்சிதான் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. இரண்டாம் இடத்தில் பா.ஜனதா கட்சி உள்ளது. அந்தக் கட்சி 53 வேட்பாளர்களை களம் இறக்கியது.

பிற தேசிய கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 24, திரிணாமுல் காங்கிரஸ் 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 10, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4 வேட்பாளர்களையும் நிறுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு பெண் வேட்பாளரை போட்டியிட செய்தது.

அரசியல் பிரபலங்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி (ரேபரேலி), நடிகை ஹேமமாலினி (பா.ஜனதா- மதுரா), நடிகை ஜெயபிரதா (பா.ஜனதா-ராம்பூர்), தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே (பாராமதி), தெலுங்கானா ராஷ்டிர சமிதி மூத்த தலைவர் கவிதா (நிஜாமாபாத்) உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்த தேர்தலில் 222 பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டது கவனிக்கத்தக்கது.

100 பெண் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில் 78 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.

தேசிய கட்சிகளில் பாரதீய ஜனதாவில் 13, காங்கிரசில் 10 பெண் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

பாரதீய ஜனதா கட்சி பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22 கோடியே 9 லட்சம். காங்கிரஸ் கட்சி பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.18 கோடியே 84 லட்சம்.

பெண் வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர் நடிகை ஹேமமாலினி. இவரது சொத்து மதிப்பு ரூ.250 கோடி. இவருக்கு அடுத்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் ராஜம்பேட்டை தொகுதி வேட்பாளர் சத்யபிரபா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.220 கோடி. 3-வது இடத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சி வேட்பாளர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.217 கோடி.

531 வேட்பாளர்களின் வயது 25-50 என்ற அளவில் உள்ளது. ஒரே ஒரு வேட்பாளர் வயது 80-ஐ கடந்து விட்டது.

இந்த வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம், இன்று அவரவர் தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை முடியும்போது தெரிய வரும்.

Health News

Post navigation

Previous Post: அஜய் மக்கான் அளித்த பேட்டியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
Next Post: தமியக்கத்தின் விவசாய பாசனத்துக்கு இந்த கூட்டம் பெரும் உதவிழாக இங்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில்

Related Posts

இளநீர் செவ்விளநீர் இளநீர் செவ்விளநீர் நன்மை Health News
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் போட்டியில் வென்றது இங்கிலாந்து Health News
தமியக்கத்தின் விவசாய பாசனத்துக்கு இந்த கூட்டம் பெரும் உதவிழாக இங்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் Health News
புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர் Health News
நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தி கொண்டு விட்டது Health News
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme