பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாவது போல, ஆந்திர மாநில சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் காட்சி சும்மர் 150 க்கும் மேலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், ஜெகன்மோகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், நகரி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான நடிகை ரோஜா, இம்முறையும் அதே தொகுதியில் வெற்றி பெற்றுவது எப்படி 100 சதவீதம் உறுதியோ அதுபோல், அவர் அமைச்சராவது உறுதி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மூலம் ‘செம்பருத்தி’ படத்தில் நடிகையாக அறிமுகமான ரோஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய சினிமாவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
1990 ஆம் ஆண்டு ஆந்திர அரசியலில் இறங்கிய ரோஜா, ஆரம்பத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தாலும், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து, கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு அதிக வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது மீண்டும் நகரில் தொகுதியில் போட்டியிட்டிருக்கும் நடிகை ரோஜா இந்த முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறுவதோடு, ஒய்.எஸ்.ஆர் கட்சியின் அமைச்சராகவும் பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மனைவியின் இத்தகைய வளர்ச்சியால் மகிழ்ச்சியடைந்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தனது மனைவி அமைச்சர் ஆவது உறுதி, என்று தனது சக இயக்குநர்களிடம் கூறி சந்தோஷப்பட்டு வருகிறாராம்.