பலமான அடி, அவமானம், கேலி – நடிகர் பிரகாஷ்ராஜ் ?வருத்தம்
தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிருந்தார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பிரகாஷ்ராஜ் மிகவும் பின்தங்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்திருக்கும் டீவீட்டில் “என் முகத்தில் பலமான அடி, அதிக கேலி, கிண்டல், விமர்சனங்கள், அவமானம் என் பாதையில். இருந்தாலும் நான் களத்தில் நிற்பேன். மதச்சார்பற்ற இந்தியாவிற்காக நான் போராடுவேன். கடினமான பயணம் தொடங்கியுள்ளது. இந்த பயணத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.