நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி டொடர்பாளர் பதவியும் வகித்து வருகிறார் இன்று பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குஷ்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான டிவி விவாதங்களில் தன்னால் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன், என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.