கசட தபற’ படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல்
வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசட தபற’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பணிபுரியும் 6 படத்தொகுப்பாளர் குறித்த தகவல் நேற்று வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாக பணிபுரியவுள்ளனர்.