Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஒரு 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி

Posted on May 23, 2019 By admin No Comments on ஒரு 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி

ஒரு பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களும் சேர்ந்து பெற்றால் கூட இத்தனை சான்றிதழ்களையும் பெற முடியாது. 50 சான்றிதழ்கள் ,பரிசுகள் பெற்று வியப்பில் அசத்திய மாணவி- துணைவேந்தர் பெருமிதம்

தேவகோட்டை

மாணவர் பருவத்தில் படிப்போடு ஒரு போட்டியில் சாதித்தாலே பெரிய விசயம்.ஆனால் பேச்சு,கட்டுரை,ஓவியம் என பங்கேற்கும் போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார்கள் 13 வயது மாணவி காயத்ரியும்,மாணவர் கார்த்திகேயனும் .இவர்களில் காயத்ரி 50 சான்றிதழ்களையும்,கார்த்திகேயன் 35 சான்றிதழ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர் .
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் வகுப்பு மாணவி காயத்ரி..இவரது தந்தை சித்ரவேல் ஆவார் . தாய் சொர்ணாம்பாள் ஆவார்.சிறு வயதில் இருந்தே அனைத்து போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்பார் .

திருச்சி அண்ணா கோளரங்கம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் மையம் நடத்தும் விநாடி வினா ,ஓவிய போட்டிகள்,கணித போட்டிகள் ,தமிழக மின்சாரவாரியத்தின் திருச்சி மண்டல அளவிலான ஓவிய போட்டிகள்,சேக்கிழார் விழா குழு,கந்தசஷ்டி விழா கழகம் ,தமிழ் சங்கங்கள் ,நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள்,சான்றுகளை குவித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளில் மாநில,மாவட்ட,மண்டல போட்டிகளில் 50 சான்றிதழ்கள் ,40 மெடல்கள் வாங்கியுள்ளார்.சிறுவயதிலேயே ஆல்ரவுண்டராக திகழும் இவர்,விழாக்கள் ,பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.

அவரது கணீர் பேச்சு பார்வையாளர்களை கவரும்.தேவாரம்,திருவாசகம்,பெரியபுராணம், ஆன்மீக பாடல்களை ரசனையாக பாடக்கூடியவர் .
பள்ளியில் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் மாணவர்களின் அன்பை வாக்குகளாக பெற்று 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாணவ தலைவராக தொடர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து மாணவி காயத்ரி கூறுகையில், எனது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்களின் ஊக்கத்தால் போட்டிகளில் வெற்றி பெறுகிறேன்.

அவர்கள் திருச்சி,மதுரை,சென்னை போன்ற ஊர்களில் போட்டிகளில் பங்கேற்க,ஆசிரியர்கள்தான் அழைத்து செல்கின்றனர்.பல்வேறு ஊர்களுக்கு இப்போதுதான் முதல் முறையாக போட்டிகளில் கலந்து கொள்ள சென்று வந்துள்ளேன்.இதுவரை இந்த ஊர்களுக்கு சென்றது இல்லை.எனது தந்தை கூலி வேலை செய்து வரும் சொற்ப சம்பளத்தில் தான் என்னை படிக்க வைக்கிறார்.வரும்காலத்தில் மருத்துவராகி கிராமத்தில் சென்று உதவி செய்யவேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார் மாணவி .

கார்த்திகேயன் :
கார்த்திகேயனின் தந்தை அழகுராஜ்.தாய் செல்வி.சிறுவயதில் இருந்தே ஓவியம்,பேச்சு,விளையாட்டு,கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் நாட்டம் கொண்டவர்.சிறுவயதிலேயே ஆல் ரவுண்டராக திகழும் இவர் பள்ளியில் மட்டுமல்ல வெளியிடங்களில் நடக்கும் விழாக்களிலும் இவரது கணீர் பேச்சு பார்வையாளர்களை கவரும்.
பத்திரிக்கை துறைகள் நடத்துகிற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வந்துள்ளது இவரது தனி சிறப்பு.பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 35 சான்றிதழ்களும் ,30 மெடலும் குவித்து வருகிறார். தேவாரம்,திருவாசகம்,பெரிய புராணம் பல நூல்கலையும் படித்து இளம் வயதிலேயே ஆன்மீக பாடல்களையும் அறிந்து வருகிறார்.பாடல்களை திறம்பட ஒப்புவிக்கும் ஆற்றல் மிக்கவர்.காயத்ரியை போலவே அதே உணர்வை மாணவர் கார்த்திகேயனும் வெளியிட்டார்.

படவிளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
விருதுகள் மேல் விருதுகள் குவித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த 13 வயது காயத்ரி,கார்த்திகேயன்

மாணவி காயத்ரி 50 சான்றிதழ்கள் பெற்றுள்ளார் என்றால், அவர் குறைந்தது 100 போட்டிகளிலாவது பங்குபெற்றிருக்க வேண்டும் – மேனாள் துணைவேந்தர் பெருமிதம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி காயத்ரி பரிசுகள் பெற்றுள்ளதை பார்வையிட்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சொ .சுப்பையா பாராட்டி பேசும்போது : நான் இந்த பள்ளிக்குள் நுழையும்போது சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.இவை பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக அடுக்கி வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்.பிறகுதான் தெரிந்தது இவை அனைத்தும் காயத்ரி என்ற ஒரு மாணவி வாங்கிய சான்றிதழ்கள் என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன்.ஒரு பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களும் சேர்ந்து பெற்றால் கூட இத்தனை சான்றிதழ்களையும் பெற முடியாது. ஆனால் இந்த பள்ளியில் காயத்ரி என்கிற இந்த மாணவி 50சான்றிதழ்களையும் ,40 பரிசுகளையும் பெற்றுள்ளார்.மாணவி காயத்ரி 50 சான்றிதழ்கள் பெற்றுள்ளார் என்றால், அவர் குறைந்தது 100 போட்டிகளிலாவது பங்குபெற்றிருக்க வேண்டும்.இந்த பள்ளி தலைமை ஆசிரியர் இந்த மாணவி 100 போட்டிகளில் பங்குபெற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் .மற்ற ஆசிரியர்களும் மாணவியை ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.அந்த மாணவிக்கு எனது வாழ்த்துக்கள்.

Health News

Post navigation

Previous Post: சென்னையில் இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.95 ஆக உயர்வு
Next Post: சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

Related Posts

தமிழகத்தில் விறுவிறுப்படையும் வாக்கு எண்ணிக்கை Health News
மாயாவதி லக்னோவில் ஆவேசம் பேச்சு பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் Health News
FICCI TANCARE 2022 – ‘Health Sector Conference & Healthcare Excellence Awards’ FICCI TANCARE 2022 – ‘Health Sector Conference & Healthcare Excellence Awards’ Health News
இந்தியா கிரிக்கெட் தோனிக்கு மிகவும் பிடித்தது என Health News
நடிகர் சங்க நில விவகாரம் – சரத்குமார், ராதாரவிக்கு சம்மன் Cinema News
உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme