நீயா 2 திரைப்படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம் குறித்த தகவல்
கடந்த 1979ம் ஆண்டு கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘நீயா’ இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா 2’ என்ற பெயரில் தற்போது உருவாகியுள்ளது. இதில் நடிகர் ஜெய்யுடன், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகிய 3 கதாநாயகிகளும் நடித்துள்ளார். இயக்குநர் எல்.சுரேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் “தேவி” என்ற கதாபாத்திரத்திலும், நடிகை ராய் லட்சுமி “மலர்” என்ற நாகராணி கதாபாத்திரத்திலும், நடிகை கேத்தரின் தெரெசா “திவ்யா” என்ற கதாபத்திரத்திலும் நடித்துள்ளனர்.