சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் 5 கிலோ மீட்டர் தூரம் நீந்தி லோகிதா சராக்சி என்ற 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்.
இவர் பட்டினம்பாக்கம் முதல் கண்ணகி சிலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை புரிந்த சிறுமிக்கு ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார். இதற்கு முன்னதாக மாநில அளவிலான நீச்சல் போட்டியில் இவர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.