Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இன்று பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி

Posted on May 22, 2019May 22, 2019 By admin No Comments on இன்று பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி

இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பிரான்ஸ் நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறின. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டி ரபேல் விமான நிறுவனத்தின் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் புறநகர் செயிண்ட் கிளவுடில் அமைந்து உள்ள ரபேல் போர் விமான திட்ட அலுவலகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடுவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த அலுவலகத்தில் இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அந்தஸ்து அதிகாரி தலைமையிலான குழு இருந்து, ரபேல் போர் விமான தயாரிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Health News

Post navigation

Previous Post: சென்னையில் 5 வயது சிறுமி புதிய சாதனை படைத்துள்ளார்
Next Post: இன்று டெல்லியில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

Related Posts

தமியக்கத்தின் விவசாய பாசனத்துக்கு இந்த கூட்டம் பெரும் உதவிழாக இங்கும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் Health News
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.95 ஆக உயர்வு Health News
நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள் நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள் Health News
ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடமுடியாது Health News
நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம் – விசாரணை தள்ளிவைப்பு Cinema News
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்????? Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme