Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Posted on May 22, 2019 By admin No Comments on ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லூர் விடவலூரு கிராமப் பகுதியையொட்டி வங்காள விரிகுடா கடற்பகுதியில் இலங்கை பதிவெண் கொண்ட காலிப்படகு ஒன்று மிதப்பதை சிலர் கண்டுபிடித்தனர். கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அனாதையாக மிதந்த இந்த படகு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே அங்கு விரைந்த போலீசார் அந்த படகை ஆய்வு செய்தனர். அப்போது அதில், குடிநீர் பாட்டில்கள், டீசல் கேன் மற்றும் போர்வைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இலங்கையை சேர்ந்த அந்த படகு மூலம் யாராவது மர்ம நபர்கள் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இலங்கையில் கடந்த மாதம் 21–ந்தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 250–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலக நாடுகளை உலுக்கிய இந்த சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கிது. இந்த தாக்குதலை தொடர்ந்து அண்டை நாடான இந்தியாவிலும் எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கை கடல் எல்லைப்பகுதியில் கடரோல காவல்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.

குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையம் மற்றும் கிருஷ்ணபட்டணம் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Health News

Post navigation

Previous Post: ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி செய்தியாளரை சந்தித்தார்
Next Post: சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

Related Posts

உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள் உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள் Health News
வைகோ அதிர்ச்சி Health News
தமிழகத்தில் விறுவிறுப்படையும் வாக்கு எண்ணிக்கை Health News
Kauvery Hospital, Radial Road, Launches “Institute of Brain & Spine” Health News
28 போலி டாக்டர்கள் கைது! 33 கிளினிக்குகள் மூடல்!! ஆட்சியர் நடவடிக்கை!!! 28 போலி டாக்டர்கள் கைது! 33 கிளினிக்குகள் மூடல்!! ஆட்சியர் நடவடிக்கை!!! Genaral News
பிரபல இயக்குநர் ‘அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் !!!!@ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme