தமிழ் சினிமாவில் சகலகலாவல்லவன் என்று சொன்னால் ஒரு சிலர் தான் அடங்குவார்கள் அந்த பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர் சிம்பு என்று சொன்னால் மிகையாகாது இதற்கு சான்றாக அப்பா வழில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
மன்மதன், வல்லவன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிப்பதோடு தனது அப்பா பாணியில் கதை திரைக்கதை வசனம், இயக்கம், இசை, பாடல், நடனம் என்று பல பொறுப்புகளையும் கையில் எடுக்கப்போகிறார் சிம்பு.
தற்போது மாநாடு மற்றும் மப்டி கன்னட படத்தின் ரீமேக்கிலும் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படங்களை இந்த ஆண்டிற்குள் முடித்து விட்டு அடுத்த ஆண்டு தான் இயக்கி நடிக்கும் படத்தை தொடங்குகிறார் சிம்பு. இந்த படத்தில் சிம்புவினால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
ஆக, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார் சிம்பு.