உலக அளவில் புகழ்ப்பெற்ற பாப் பாடகியான செலீனா கோம்ஸ், தன்னை விட 42 வயது அதிகமான நடிகரை திருமணம் செய்ய இருக்கிறார்.
பால் உலகின் ராணி என்று அழைக்கப்படும் செலீனா கோம்ஸ், பற்றி பல காதல் வதந்திகள் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங் டூ கெதரில் வாழ்ந்ததாக கூட கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் பில் முர்ரே என்பவரை செலீனா காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் ஆங்கில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. செலீனாவுக்கு வயது 26. நடிகர் முர்ரேவுக்கு வயது 68. அதாவது செலீனாவை விட 42 வயது அதிகம் உடையவர். கிட்டத்தட்ட அவருக்கு தாத்தா வயதுடையவர்.
இப்படி வயதான ஒருவரை செலீனா திருமணம் செய்துக்கொள்ள இருக்கும் செய்தியை அறிந்து உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.