புதுடெல்லி,
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.