இஸ்லாமாபாத்,
நவாஸ் ஷெரீப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவர் தனது உடல்நிலையை காரணமாக வைத்து ஜாமீன் கேட்டார். அதனால், கடந்த மார்ச் மாதம், அவருக்கு 6 வார கால ஜாமீன் அளிக்கப்பட்டது. 6 வார காலம் முடிந்தவுடன், கடந்த 7–ந் தேதி அவர் மீண்டும் சிறைக்கு சென்றார்.
இந்நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி, தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பதற்றமும், மனஅழுத்தமும் நவாஸ் ஷெரீப்பின் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.