புதுடெல்லி,
நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.04 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.