Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தி கொண்டு விட்டது

Posted on May 21, 2019May 21, 2019 By admin No Comments on நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தி கொண்டு விட்டது

புதுடெல்லி,

மோடியின் படத்தை இலச்சினையாகக் கொண்ட நமோ டிவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கியது. 24 மணி நேரமும் மோடியின் பேச்சுக்களை இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

தேர்தல் காலத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நமோ தொலைக்காட்சிக்கு டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியும் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனிடையே, மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் 19ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. அன்றைய தினத்திலேயே நமோ தொலைக்காட்சியின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டு விட்டது.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் பாஜக பிரசாரத்துக்காகவே நமோ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால், அந்த தொலைக்காட்சி இனி தேவையில்லை. ஆதலால் 17-ஆம் தேதியிலிருந்து தனது ஒளிபரப்பை நமோ தொலைக்காட்சி நிறுத்தி கொண்டு விட்டது” என்றார்.

Health News

Post navigation

Previous Post: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்
Next Post: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Related Posts

முதலில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு Health News
Hello Doctor - 2001 SIMS Hospital’s Launches Hello Doctor – 2001 2001 Health News
தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி??? Genaral News
Glorious Star Awards 2019 , Mr and Ms Star Icon of Tamil Nadu by White Shadow, held in the city Cinema News
TONI & GUY Essensuals inaugurated by Actor Vaibav at Mount Road, chennai Health News
இந்தியாமற்றும் தமிழக செய்திகள் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme