நடிகர் தல அஜித் படத்தின் இயக்குனர் யார் என்பது மிக பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது இதற்கு முக்கிய காரணம் அஜித் ஏற்கனவே வந்த சில செய்திகளில் வினோத் தான் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்குவார் என்று ஆனால் சமீபத்தில் அது மாறியது அஜித் படத்தை இயக்கும் இயக்குனர் பட்டியல் நீண்டு கொண்டே போனது ஆனால் வினோத் அஜித் நினைத்தது போல கதை தயார் செய்து இவர் தான் அடுத்த படத்தின் இயக்குனர் என்று உறுதி செய்தார்.
விஸ்வாசம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அஜித். ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கி வரும் படம்தான் ‘நேர் கொண்ட பார்வை’. ஹிந்தியில் வெளிவந்த ‘பின்க்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். முதலில் ரீமேக் படத்தை இயக்க வினோத் மறுத்துள்ளார். ஆனால், அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் சேர்த்தே நீங்கள் இயக்கலாம் என தயாரிப்பு நிறுவனமும், அஜித்தும் உறுதியளித்ததை அடுத்தே இந்தப் படத்தை இயக்க சம்மதித்தார் வினோத்.
‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் அந்த வேலைகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கான கதையை வினோத் எழுதி முடித்து அதை அஜித்திடம் சொன்னாராம். அஜித்திற்கும் கதை பிடித்து ஓகே சொல்லிவிட்டதாகத் தகவல். விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்பை வெளியிடயும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இதனிடையே இந்த புதிய படத்திற்கு யாரை இசையமைப்பாளராக நியமிக்கலாம் என்பதில் கடும் விவாதம் நடந்து வருகிறதாம். தயாரிப்பாளர் தரப்பில் ஏஆர் ரகுமான் பேச்சு அடிபடுவதாகத் தகவல். அப்படி நடந்தால் ‘வரலாறு’ படத்திற்குப் பிறகு அஜித் – ரகுமான் மீண்டும் இணையும் படமாக அது இருக்கும்.