மும்பை,
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்கிறது.
இந்நிலையில் நிருபர்களை சந்தித்த, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர் டோனி என புகழாரம் சூட்டினார்.
அவருக்கு நிகராக வேறு ஒருவர் வீரர் இல்லை என குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி முக்கிய பங்கு வகிப்பார். எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.