Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்

Posted on May 21, 2019May 21, 2019 By admin No Comments on டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்

சென்னை:

பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது பற்றி கட்சித்தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, பாஜ தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் இன்று பாஜ கூட்டணி கட்சி தலைவர்களை கவுரவிக்கும் வகையில் பெரிய அளவில் விருந்து நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. விருந்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பாஜ கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், அவரது புறப்பாடு கடைசி நேரத்தில் ரத்தானது.

இந்நிலையில் டெல்லி செல்வதற்கு முன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது: பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது பற்றி கட்சித்தலைமை ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மே-23-ல் அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கு பின் அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி முடிவு செய்யப்படும். பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான கருத்துக்கணிப்புகள் மக்களின் முடிவை பிரதிபலிக்கிறது. கருத்துக்கணிப்புகளை ‘கருத்து திணிப்பு’ என கூறுவது அவரவர் விருப்பம் என ஓபிஎஸ் கூறினார்.

Health News

Post navigation

Previous Post: மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள்
Next Post: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்

Related Posts

இன்று தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக 36 இடங்களில் முன்னிலை, அதிமுக 2 இடங்களில் முன்னிலை Health News
தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளா இந்திய கிரிக்கெட் வீரர் யார் . Health News
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் விருந்து Health News
Chinas-Hubei-province-reports-2447-new-cases-of-the-deadly_indiastarsnow.com சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 630 ஆக உயர்வு Genaral News
மருந்தே உணவு இயற்கை மருத்துவம் மருந்தே உணவு இயற்கை மருத்துவம் Health News
இந்தியன் பீட்ரூட் பிரியாணி Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme