மோசடிகளே மூலதனம்… இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன்
சென்னை: மோசடிகளை மூலதனமாக வைத்து வெளியான கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாஜ கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு விருந்தளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், கடந்த சில தேர்தல்களில், கருத்துக்கணிப்புகள் பொய்யாகி இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வரும் எதிர்க்கட்சியினர், இவிஎம்இயந்திரத்தில் மோசடி நடைபெற்று விட்டதாக, குற்றம்சாட்டி உள்ளனர்.
28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா?.. எக்சிட் போல் சொல்வது என்ன?
மறுபுறம் அமைச்சரவையில், யாருக்கெல்லாம் இடம் அளிக்க வேண்டும் என்ற கணக்கை பாஜக தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு ஆட்சி நடந்தால், அதிமுகவும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்தநிலையில், மோசடிகளை மூலதனமாக வைத்து வெளியான கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
மேலும், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தொண்டர்கள், இதனை கண்டு கொள்ளாமல், விழிப்புடன் வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பழனிசாமியின் முடிவுரை மே 23 ஆம் தேதி தெரிந்துவிடும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.