Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்

Posted on May 21, 2019 By admin No Comments on ஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்

 

தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இவர், தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்கியுள்ள படம் “சென்னை பழனி மார்ஸ்”.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் “சென்னை பழனி மார்ஸ்”. விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை கவனிக்க,
தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி.

“சென்னை பழனி மார்ஸ்” ட்ராவல் படமாக இருந்தாலும், அதில் இணைந்துகொள்ளும் பல்வேறு கேரக்டர்கள் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தும்.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால்.

மிக சுவாரஸ்யமான ஒரு பயணக் கதையை திரையில் ஜாலியாகக் கண்டுகளிக்க வருகிறது “சென்னை பழனி மார்ஸ்”. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இசை : நிரஞ்சன் பாபு (அறிமுகம்)
பாடல்கள் : விக்னேஷ் ஜெயபால்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ; பிஜு
வசனம் : விஜய் சேதுபதி
தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் & ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்

Cinema News

Post navigation

Previous Post: ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்
Next Post: Oththa Serupu Size 7 Film Audio Launch

Related Posts

S.J. Suryah, Laila, Sanjana and Vivek Prasanna from Vadhandhi Cinema News
பேட்டைக்காளி – இது படமல்ல வாழ்வியல்: சீமான் பேச்சு பேட்டைக்காளி – இது படமல்ல வாழ்வியல்: சீமான் பேச்சு Cinema News
தல 60’பட ட்ரெயிலரை வெளியிட்ட அஜீத் வெறியர்...வீடியோ தல 60’பட ட்ரெயிலரை வெளியிட்ட அஜீத் வெறியர்…வீடியோ Cinema News
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் படம்: பள்ளி பருவ காதலை கொண்டாடும் “நினைவெல்லாம் நீயடா” ! Cinema News
குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை - தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை – தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு Cinema News
தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம் தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம்?? Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme