புதுடெல்லி,
ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் விவகாரத்தில், 50 சதவீத சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்து விட்டது.
இருப்பினும், தேர்தல் கமிஷனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் இதுகுறித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இத்தகவலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.