மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வந்த புகார் : தேர்தல் ஆணையம் மறுப்பு
டெல்லி :
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து மாற்றப்படுவதாக வந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிச்செல்வதுபோல் ஊடகங்களில் வெளியான காட்சிகள் உண்மையல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் 93 கூட்டங்களை நடத்தி உள்ளது. அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் நடைமுறை குறித்து கட்சிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு : காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்
சென்னை :
வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 2500 போலீஸ் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகே உள்ள சாலைகளில் 2500 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.டி.சீதாபதி காலமானார்
சென்னை:
திமுக மாவட்ட முன்னாள் செயலாளர் ஆர்.டி.சீதாபதி சென்னையில் காலமானார். ஆர்.டி.சீதாபதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டவர் ஆவார்.
டெல்லியில் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்
டெல்லி:
டெல்லியில் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு… கவலை அளிக்கிறது; பிரணாப் முகர்ஜி அறிக்கை
டெல்லி:
வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதாக வெளியாகும் தகவல் கவலை அளிக்கிறது என பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு எனவும் கூறியுள்ளார். மக்கள் அளித்த வாக்குகள் மிகவும் புனிதமானது; அதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலபிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு
இட்டாநகர் :
அருணாச்சலபிரதேசம் மேற்கு கோன்சா பகுதியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் என்பிபி கட்சியின் வேட்பாளர் திரோங் அபோ உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பெரிய அறையில் நடத்த ஏற்பாடு
கரூர்:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பெரிய அறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 14 மேசைகளில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்; 18 முதல் 23 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : பாதுகாப்பு பணியில் 3000 போலீசார்
தூத்துக்குடி :
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை தூத்துக்குடி பெல் ஓட்டலில் ஒரு தரப்பினர் நினைவஞ்சலி கூட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக அங்கு 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு
சென்னை;
தமிழகம் முழுவதும் வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பல ஊர்களில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை மற்றும் புறநகரில் இயங்கும் 4,500 லாரிகள் ஸ்டிரைக்கால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதை கண்டித்து ஜுன் 4-ல் ஆர்ப்பாட்டம்
தஞ்சை:
விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ஜுன் 4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. ஜுன் 12-ம் தேதி மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை மனிதச் சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும்: ஸ்டாலின் அறிக்கை
சென்னை:
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். துப்பாக்கிச்சுட்டுக்கு ஆணையிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் 23ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல் : தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
சென்னை :
தமிழகத்தில் மே 23ம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ உத்தரவிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழகத்தில் நாளை மறுநாள் (23-05-2019) காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்திய தேர்தல் முடிவு: அமெரிக்காவில் நேரடி ஒளிபரப்பு..
புதுடில்லி:
இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள், முதல்முறையாக அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உள்ள தியேட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் அனல் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை:
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள்(மே.23) பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும். மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். எனக்கூறப்பட்டுள்ளது.
முகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட அறிக்கை: வரும் 23ம் தேதி ஓட்டு எண்ணும் மையங்களில், வேட்பாளர்களின் முகவர்கள் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. மையங்களில், ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணிய பிறகே, விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விவிபாட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன…..
வாக்கினை குறிப்பிட்ட வேட்பாளருக்கு அளித்ததை வாக்காளர் பார்த்து உறுதி செய்ய ‘விவிபாட்’ எந்திரம் வழி வகுத்தது. மின்னணு வாக்கு எந்திரத்தில் நாம் எந்த வேட்பாளருக்கு வாக்குப்பதிவு செய்தோமோ, அந்த வாக்காளருக்குத்தான் வாக்குப்பதிவாகி உள்ளதா என்பதை இந்த விவிபாட் எந்திரம் வாக்காளருக்கு காட்டும். ஆனால் அதன் அச்சிட்ட பதிவு, வாக்காளர்களுக்கு வழங்கப்படாது. அங்கே சேகரித்து பாதுகாக்கப்படும். இதுதான் நடைமுறை.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்களுடன், இந்த ‘விவிபாட்’ எந்திரங்களும் இணைக்கப்பட்டது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, ‘விவிபாட்’ எந்திரங்கள் உறுதிபடுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
ஆனால் இது போதாது ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 வாக்குச்சாவடிகளில் பதிவாகிற வாக்குகளையாவது, இப்படி ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க., தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒரு சட்டசபை தொகுதியில் 5 வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவாகிற வாக்குகளை, ‘விவிபாட்’ எந்திரங்கள் உறுதிபடுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மீண்டும் அதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் மேல் முறையீடு செய்தபோது சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.
இப்போது தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதும் எதிர்க்கட்சிகள் அதே கோரிக்கையை முன்வைக்கின்றன. தேர்தல் ஆணையர்களிடம் பேச எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்தனர். ஒரு வாக்குச்சாவடியில் குளறுபடி காணப்பட்டாலும் சட்டசபைத் தொகுதியில் உள்ள அனைத்து சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பதிவு மற்றும் விவிபாட் அச்சிட்ட பதிவுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.
ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையெழுத்திட்ட புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படுகிறது.
தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து, வடக்கு கூடுதல் காவல் ஆணையர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.
அ.தி.மு.க. பிளவுபட்டு நிற்பது பிற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது என்று நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் முலாயம் சிங் மற்றும் அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் இன்று மனு செய்துள்ளார்.
டெல்லி: “என்னுடைய தந்தை மென்மையானவர், அமைதியானவர். கனிவானவரும் அன்பானவரும் கூட. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று ராகுல் காந்தி உருக்கமாக ட்வீட்