மத்தியில் மாநில கட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் வைகோ பேட்டி
இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நீதிமன்றத்தில் தலைவர் வைகோ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது மத்தியில் மாநில கட்சிகளோடு காங்கி்ரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன் என்றும்
பல நேரங்களில் கருத்துக்கணிப்பு அப்படியே நடந்துவிடாது; 2004-ல் கருத்துக்கணிப்பு படி தேர்தல் முடிவு அமையவில்லை என்றும்
தமிழ்நாட்டில் மேலும் மேலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட
வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விளை நிலத்தில் பயிரிட்ட நெல்
நாற்றுகளை இயந்திரங்களைக் கொண்டு இறக்கியது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடக்காத கொடுமை.
இதற்குத் தமிழக அரசு முழுக்க முழுக்க உடந்தை. காவிரி மண்டலத்து மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றார்கள். என்றும் தலைவர் வைகோ தெரிவித்தார்