பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயானது 4-வது கட்டத்தை எட்டி விட்டதால் நூர் பாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேசமயத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆசிப் அலி விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 2 வயது சிறுமி நூர் பாத்திமா உயிரிழந்தார். தனது மகள் உயிரிழந்த தகவல் கிடைத்தவுடன், இங்கிலாந்தில் இருந்து ஆசிப் அலி உடனடியாக புறப்பட்டார்.