நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் வலையில் சிக்கி விட்டார் என்பதே அந்த வதந்தி. அவருடைய சினேகிதர்களுக்கும், சினேகிதிகளுக்கும் அந்த வதந்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. காதலர் பெயர் என்ன, அவர் என்ன செய்கிறார்? என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ‘‘அது வெறும் வதந்திதான்’’ என்று அவர் களுக்கு விளக்குவதற்குள் ஐஸ்வர்யா ராஜேசுக்கு போதும்…போதும்…என்றாகி விட்டதாம்!