நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித்குமாரை வைத்து மேலும் 3 புதிய படங்களை தயாரிக்க போனிகபூர் திட்டமிட்டு இருக்கிறார். இதை போனிகபூர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேறு ஒரு பட நிறுவனம் திட்டமிட்டது. இதேபோல் அஜித்தை வைத்து இன்னொரு புதிய படத்தை தயாரிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் முன்வந்துள்ளது. அஜித் ‘கால்ஷீட்’ யாருக்கு? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.