உலக கோப்பை கிரிக்கெட்டில் 16 வருடங்களுக்கு முன் சச்சின் தெண்டுல்கர் நிகழ்த்திய சாதனையை இந்த உலகக்கோப்பை தொடரில் யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கிவிட்டது.
2003 உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் அடித்தார் சச்சின் தெண்டுல்கர். இதுவே உலகக்கோப்பை தொடரில் தனி நபர் அடித்த அதிக ரன்கள் ஆகும். 2003-ம் ஆண்டு சச்சின் தெண்டுல்கர் நிகழ்த்திய இந்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. 2003 உலகக்கோப்பை தொடரில் ஒரு சதம், 6 அரை சதங்களை அடித்துள்ளார் சச்சின்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சில வீரர்கள் இந்த தொடரில் சச்சினின் சாதனையை முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அவரை தொடர்ந்து இங்கிலாந்தின் ஜானி பயர்ஸ்டோ, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், வெஸ்ட் இன்டீஸ் அணியின் கிறிஸ் கெயில், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த டாப் 4 வீரர்கள்
சச்சின் தெண்டுல்கர்673-2003
மேத்யூவ் ஹேடன்659-2007
மஹேல ஜெயவர்தனே548-2007
மார்டின் குப்தில் 547-2015