Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது

Posted on May 20, 2019May 20, 2019 By admin No Comments on இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேர்வதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 42-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர்வதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்..

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-7-2000 மற்றும் 1-7-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 8-6-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Health News

Post navigation

Previous Post: 12-வது உலக கோப்பை கிரிக்கெட்ல் சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு – ஐ.சி.சி. அறிவிப்பு
Next Post: இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்

Related Posts

வயதான தோற்றத்தை போக்கி 6 குறிப்புகள்-indiastarsnow.com வயதான தோற்றத்தை போக்க 6 குறிப்புகள் Health News
Chinas-Hubei-province-reports-2447-new-cases-of-the-deadly_indiastarsnow.com சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 630 ஆக உயர்வு Genaral News
நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள் நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள் Health News
SIMS Hospital Conducts Successful High Performance Hip Replacement Surgery on 62 Year Old UK National through advanced technology SIMS Hospital Conducts Successful High Performance Hip Replacement Surgery on 62 Year Old UK National through advanced technology Health News
சிறுநீரகக் கல் கரைக்கும்... மாதவிடாய்க் கோளாறு நீக்கும் சிறுபீளை! சிறுநீரகக் கல் கரைக்கும்… மாதவிடாய்க் கோளாறு நீக்கும் சிறுபீளை! Genaral News
தர்மபுரியல் அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme