நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக சரத்குமாரும், ராதாரவியும் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் படப்பிடிப்பு நடப்பதால் மற்றொரு நாளில் ஆஜராவதாக கூறி விஷால் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்யவும், குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கவும், வருகிற 20ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.