புதுடில்லி:
உ.பி., மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், அவரது தங்கை பிரியங்கா, முழுமூச்சாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்கு இடையே, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழந்தைகளையும் சந்தித்தார் பிரியங்கா.
அப்போது, மோடிக்கு எதிராக, மோசமான கோஷங்களை அந்த குழந்தைகள் எழுப்ப, இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. எப்படி குழந்தைகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தலாம் என, விமர்சனங்களும் எழுந்தன.இப்பிரச்னையில், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், களம் இறங்கியது. ‘குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்; அந்த குழந்தைகள் குறித்த விபரங்களை கொடுங்கள்’ என, பிரியங்காவிடம் கேட்டது. ஆனால், விபரங்களை அளிக்க, பிரியங்கா மறுத்துவிட்டார்.
இந்த பதில் தான் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த, ஆணையம், ‘நீங்கள் கொடுக்காவிட்டாலும், அவர்கள் யார் என்பதை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம். அவர்களை யார் பிரசாரத்திற்கு அழைத்து வந்தனர் என்பதையும் தெரிந்து கொண்டு, மீண்டும் உங்களிடம் வருகிறோம்’ என, கூறியுள்ளதாம். உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் தான், இந்த குழந்தைகள் பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்து, பிரியங்காவையும் சந்திக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குழந்தைகள், ஆணையத்தின் விசாரணையில் சிக்கிவிடக் கூடாது என்பதில், கண்டிப்பாக உள்ளாராம் பிரியங்கா. இதனால், காங்கிரஸ்காரர்கள், இந்த குழந்தைகளைப் பாதுகாப்பதில், கவனமாக உள்ளனராம்.
கேபினட் செயலர் ஆகிறார் கிரிஜா?