தும்பா’ படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தின் நாயகன் தர்ஷன், அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தும்பா’. ஹரிஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத், விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் ஜூன் 21ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.