ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி போல நாயகன் தோற்றம் கொண்டுள்ளார். மேலும் இது நடிகர் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.