அரவக்குறிச்சியில் அதிக வாக்குப்பதிவு.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
சென்னை:
தமிழகத்தில் நடைபெற்று வரும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதியம் ஒரு மணி நேர நிலவரப்படி, மொத்தம் பதிவான வாக்குகள் 47.86 சதவீதம் ஆகும். அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 52.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
தேர்தல் தொடர்பான உடனுக்குடனான தகவல்களை இந்த லைவ் பக்கத்தில் பார்க்க இணைந்திருங்கள்.
மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 47.86 சதவீதம் வாக்குகள் பதிவு!
4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி மொத்தம் பதிவான வாக்குகள் 47.86 சதவீதம் வாக்குகள் பதிவானது. அரவக்குறிச்சியில் 52.62 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. சூலூர் சட்டசபை தொகுதியில் 48.04 சதவீதம் வாக்குகள் பதிவானது. திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் 47.09 % வாக்குகள் பதிவானது. ஒட்டப்பிடாரத்தில் 45.06 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.
சூலூர் சட்டசபை தொகுதியில் வாக்களித்த 103 வயது மூதாட்டி.
சென்னை: கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதியில் 103 வயதான மூதாட்டி துளசியம்மாள், பாப்பம்பட்டி அரசுப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
ஈவிஎம் கோளாறு.. சூலூரில் வாக்குப் பதிவு பாதிப்பு
சூலூர் தொகுதிக்குட்பட்ட எலச்சிபாளையம் 37-ஆவது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் பாதிப்படைந்ததால் அரை மணி நேரத்துக்கு மேலாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
மறுத்தேர்தல்
தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளுக்கு இன்று மறுத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி பூந்தமல்லியில் 12.01 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டியில் 12.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பண்ருட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் 19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது ஆண்டிப்பட்டியில் 12.75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
4 ஆம்னி பேருந்துகளில் வாக்காளர்களால் திடீர் பரபரப்பு
வாக்களிக்க சென்னையிலிருந்து 4 ஆம்னி பேருந்துகளில் அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டி அருகே பேருந்தில் வந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பேருந்தில் இருந்த பயணிகளிடம் வாக்காளர் அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இவர்களிடம் மத்திய மண்டல ஐஜி வரதராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பும், மந்தமும்..
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பும், மந்தமும்..
ஓட்டப்பிடாரம் சட்டசபை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் மோகன் கவர்னகிரியில் வாக்களித்தார். திமுக வேட்பாளர் சண்முகையாவின் சொந்த ஊரான அயிரவன்பட்டியில் இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அது போல் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தலில் நடைபெற்று வரும் ஐரவன்பட்டியில் உள்ள டிஎன்டிடிஏ தொடக்கப்பள்ளியில் மின் வெட்டு காரணமாக வாக்குப் பதிவு மந்தமாகியுள்ளது.
ஒட்டப்பிடாரத்தில் வாக்குப்பதிவு விறுவிறு!
தமிழக சட்டசபை இடைத்தேர்தல் 7 மணிக்கு தொடங்கி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 10.51 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது. அது போல் ஒட்டப்பிடாரத்தில் 14.53 சதவீதம் வாக்குப் பதிவும், சூலூரில் 11.00 சதவீதம், திருப்பரங்குன்றத்தில் 12.25 வாக்குப் பதிவும் நிகழ்ந்துள்ளது.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி தொகுதி தோட்டக்குறிச்சியில், திமுக தொண்டர்கள் மற்றும் போலீசாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் திரண்டிருந்த தொண்டர்களை கலைந்து போக போலீஸ் அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
முதியவரை கைதாங்கலாக அழைத்து சென்ற திமுக வேட்பாளர்!
திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவையொட்டி வாக்களிக்க வந்த முதியவரை கைத்தாங்கலாக பிடித்த படியே வெளியே அழைத்து வந்தார் அத்தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கருமத்தாம்பட்டியில் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. 116-ஆவது வாக்குச் சாவடியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் உழைப்பாளி கட்சியின் பட்டன்கள் வேலை செய்ய வில்லை என புகார் எழுந்ததால் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. இதையடுத்து பழுதுகள் நீக்கப்பட்டு தற்போது ஒரு மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது.
கோவை:
சூலூர் ஜல்லிப்பட்டியில் பச்சை காவி அணிந்த முருக பக்தர்களுக்கு வாக்குப் பதிவு மறுக்கப்படுகிறது. மேலும் வாக்களிக்க அனுமதி மறுத்து போலீஸார் வெளியே தள்ளியதாக புகார் எழுந்துள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கருமத்தாம்பட்டியில் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. 116-ஆவது வாக்குச் சாவடியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் உழைப்பாளி கட்சியின் பட்டன்கள் வேலை செய்ய வில்லை என புகார் எழுந்ததால் வாக்குப் பதிவு தொடங்கிவில்லை.
இடைத்தேர்தல்
தமிழகத்தின் 4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 13 வாக்குச் சாவடிகளுக்கான மறுவாக்குப் பதிவும் தொடங்கியது .
அரவக்குறிச்சி
கரூர் மாவட்டத்திலுள்ள, அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேர் போட்டியிடுகிறார்கள். இங்கு, மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிடுவதால், இந்த தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஒட்டப்பிடாரம்
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இங்கு மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்களாளர்கள் உள்ளனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டத்திலுள்ள, திருப்பரங்குன்றத்தில், அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்த ஏ.கே.போஸ் மரணமடைந்ததால், இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சூலூர்
கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில், அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்ததால் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.