லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் சீனியர் நடிகை! – அதிர்ச்சியில் திரையுலம்
தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகளிலும் முதலிடத்தில் இருக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுப்பதோடு, முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கும் படத்தின் மூலமும் நயன் ஹிட் கொடுப்பதால், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். ரூ.4 முதல் 5 கோடி வரை சம்பளம் கேட்கும் நயன்தாரா, கதை, இயக்குநர் உள்ளிட்டவைகளை மனதில் வைத்து ரூ.5 கோடிக்கு கீழ் தான் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து பிறகு திவிர அரசியலில் ஈடுபட்டு, தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் விஜயசாந்தி சம்பளமாக ரூ.5 கோடி கேட்கிறாராம்.
மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க விஜயசாந்தியிடம் பேசப்பட்டபோது அவர் சம்பளமாக ரூ.5 கோடி கேட்டாராம்.
விஜயசாந்தியின் இந்த சம்பள தொகை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு மட்டும் ஒன்றி, ஒட்டு மொத்த திரையுலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.