ரஜினிக்கு மீண்டும் குரல் கொடுக்கும் பிரபல பாடகர்
பேட்ட’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். மும்பையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 27ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில் ‘தர்பார்’ படத்தின் ரஜினி அறிமுக பாடலை அவரது ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ‘பேட்ட’ படத்திலும் ரஜினி அறிமுக பாடலான “மரண மாஸ்” பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.