Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிளவுவாதிகளின், தலைவர் நரேந்திர மோடி என்று ???

Posted on May 18, 2019May 18, 2019 By admin No Comments on பிளவுவாதிகளின், தலைவர் நரேந்திர மோடி என்று ???

டைம் இதழ் என்னைப் பற்றி ஏன் அப்படி கட்டுரை வெளியிட்டது தெரியுமா? மோடி பதில் இதுதான்

டெல்லி:

அமெரிக்காவின் ‘டைம்’ இதழில் பிளவுவாதிகளின், தலைவர் என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டு கட்டுரை வெளியிடப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல செய்தி இதழ், ‘டைம்’. இதன் சமீபத்திய பிரசுரத்தின், அட்டைப்படத்தில், நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றதுடன், பிளவுவாதிகளின் தலைவர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னாட்சி அமைப்புகள் மோடி ஆட்சி காலத்தில் சீர்குலைக்கபட்டதாகவும், சிறுபான்மையினர் அச்சத்தோடு வாழ்வதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டுரை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம், நேற்று, அவரது செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், டைம் இதழ் வெளி நாட்டைச் சேர்ந்தது. அதை கட்டுரையை எழுதிய எழுத்தாளரும் கூட பாகிஸ்தானின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதுவே அந்த கட்டுரையின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பதற்கு போதுமான ஒரு சான்றாகும், என்று மோடி பதிலளித்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கடந்த வாரம் அளித்த பேட்டியில், இந்த கட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஆதிஷ் தஷீர் என்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பாகிஸ்தானிடமிருந்து வேறு மாதிரியான கட்டுரையை நாம் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருந்தார்.
மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான் தஷீர் மற்றும் இந்திய பத்திரிகையாளர் தவ்லீன் சிங் ஆகியோரின் மகன் தான் இந்த கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.

Health News

Post navigation

Previous Post: மித்ஷாவிடம் கேளுங்கள் என்னிடம் வேண்டாம்.ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்காத மோடி.
Next Post: 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘இந்து’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை”-கமல்

Related Posts

வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் நடைபெற்ற அதிக அபாய இதய அறுவை சிகிச்சை 68 வயது விவசாயியின் உயிரைக் காப்பாற்றியது Health News
கஷாயம் வாரம் - தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்-indiastarsnow.com கஷாயம் வாரம் – தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம் Health News
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது Cinema News
ஆம்வே இந்தியா குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறது ஆம்வே இந்தியா குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறது Health News
மருந்தே உணவு இயற்கை மருத்துவம் மருந்தே உணவு இயற்கை மருத்துவம் Health News
நடிகை ரோஜா அமைச்சராவது உறுதி! – குஷியில் ஆர்.கே.செல்வமணி Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme