செல்போனில் இருந்து சிங்கிள் மெசேஜ் தட்டினால்.. ஆதார் எண்ணை முடக்கலாம்.. புதிய வசதி அறிமுகம்
டெல்லி:
உங்கள் செல்போனில் இருந்து ஒரு சிறிய எஸ்எம்எஸ் அனுப்பவதன் மூலம் உங்கள் ஆதார் எண்ணை யாரும் தவறாக பயன்படுத்தாத வண்ணம் முடக்கும் வசதியை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் எண் குறித்த பாதுகாப்பு அம்சங்களை தனித்துவ அடையாள ஆணையம், மேம்படுத்தி வந்தாலும், யார் வேண்டுமானாலும் ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.
Now you can locking and Unlocking Aadhaar number via SMS , check details
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனித்துவ அடையாள ஆணையம், ஆதாரை முடக்கும் வசதியை அறிமுகம் செய்து உள்ளது. இதன்படி www.uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மை ஆதாரை கிளிக் செய்ய வேண்டும். அதில் ஆதார் சர்வீசஸ் என்று பட்டியல் நீளும். அதில் ஆதார் லாக் மற்றும் அன்லாக் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் அதில். தேவையான விவரங்களை பதிவு செய்தாலே, ஆதாரை முடக்க முடியும். அல்லது முடக்கத்தை திரும்பப் பெறவும் முடியும்.
இந்நிலையில் செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் இந்த வசதியைப் பெற முடியும் அதாவது 1947 என்ற எண்ணுக்கு GETOTP என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட்டீர்கள் என்றால், ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் செல்போன் நம்பரக்கு 6 இலக்க ஓடிபி (கடவுச்சொல்) வரும். அதன் பின்னர் LOCKUID ஸ்பேஸ், ஆதார் மெய்நிகர் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண் ஸ்பேஸ் 6 இலக்க ஓடிபியை (கடவுச்சொல்லை) டைப் செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் ஆதார் எண் முடக்கப்பட்டு விடும். அதற்கான மெசேஜ்ம் உங்கள் செல்போனுக்கு வந்திடும்.
நாங்க அந்த சிலையை உடைக்கவில்லை.. புதுசா கட்டிக்கொடுக்கிறோம்.. கொல்கத்தாவில் மோடி புது டிவிஸ்ட்!
அதேவேளையில், குறுஞ்செய்தி மூலம், முடக்கத்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என்றால், ஆதார் மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்க எண்ணை இதே போல் அனுப்ப வேண்டும். ஓடிபி வந்தவுடன், UNLOCKUID – ஸ்பேஸ் – ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கம்- ஸ்பேஸ் – 6 இலக்க ஓடிபியை டைப் செய்து அனுப்பினால் முடக்கம் மீண்டும் ரத்தாகி விடும்.