தமிழின போராளி வைகோ அவர்களின் தலைமையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி தி மு கழகத்தின் தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மறுமலர்ச்சி தி மு கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா , கவிஞர் காசி ஆனந்தன் , இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் , மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி , கழக அமைப்பு செயலாளர் வந்தியதேவன் , அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் D R R செங்குட்டுவன் , வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ் , கவிஞர் மணிவேந்தன் மற்றும் மறுமலர்ச்சி தி மு கழகத்தின் முன்னணி இயக்கத் தோழர்கள் , கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்