ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபோ மோனிகா அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். அந்த அணியின் கேப்டனாக இந்துஜா நடிக்கிறார். அந்த அணியில் விளையாடும் வீராங்கனைகளாக ரெபோ மோனிகா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடித்துக் கொண்டிருந்த ரெபோ மோனிகாவை, ஒரு தலையாய் காதலித்த ஒருவன், அவர் முகத்தில் ஆசிட் வீசி விட வீட்டிலேயே முடங்கி விடுகிறார். அவரை அழைத்து வந்து நம்பிக்கையூட்டி ஜெயிக்க வைக்கிறார் விஜய். இதுதான் ரெபோ மோனிகா கதாபாத்திரத்தின் கதை என்று கூறப்படுகிறது.