நடிகர் பார்த்திபன் நடிப்பில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இவரின் ட்விட்டர் பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் பதிவு செய்துருக்கும் டீவீட்டில் “கோவையில் எனக்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்ய (கலைஞர் பயன்படுத்தியது) அவ்விருக்கைக்கென ஒரு தலைவர் இருக்கையில் நான் அமரமாட்டேன் எனக்கூறி அடுத்தமர்ந்தேன்! மதிக்கப்பட்ட -வரின் நினைவாக அதை வாங்கியவர் என் மதிப்புக் குள்ளானார், சச்சின் காரை வாங்கி என் நட்புக்குள்ளானார்! Green crest வாழ்க” என்று பதிவிட்டுள்ளார். அதாவது அது மறைந்த கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய இருக்கை அதில் அமரமாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.