பத்திரிக்கையாளர் சந்திப்பில் .. மோடிக்கு பதில் அமித்ஷா பேசினார் .. அடுத்த முறை சில கேள்விகளுக்கு பதிலளிக்க அமித்ஷா அனுமதியளிக்கலாமென ராகுல் கிண்டலடித்திருக்கிறார் .. நாட்டின் பிரதமர் கடந்த ஐந்தாண்டுகளில் ஊடகத்தை சந்திக்கவே இல்லையென்ற பெருமையோடு கடைசி தினம் சந்தித்து விடைபெறுகிறார் .. விடுதலை இந்தியாவில் எந்த பிரதமரும் பத்திரிக்கையாளர்கள் சந்திக்க பயந்ததில்லை .. 56 இன்ச் என பெருமை பேசி வந்த வீராதி வீரர் கடைசிவரை தப்பித்தார் ..
..
ஐந்தாண்டுகள் சிறந்த ஆட்சியை தந்ததாக சொல்லும் போது அவரின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை .. தேர்தல் நடக்கும் போது IPL சூதாட்டத்தை நடத்தியதற்காக பெருமைகொள்கிற பிரதமர் .. காங்கிரஸ் நடத்தவில்லை என சொல்வதிலிருந்தே அவருக்கு இப்போதும் வேறெந்த சாதனைகளும் சொல்வதற்கில்லை என்பது தெளிவாகிறது .. ஊடகங்களும் மிக மென்மையான போக்கையே கடைபிடித்தன .. வலிக்காமல் அடித்தன என்று கூட சொல்லலாம் அவரது ஆடையைப்பற்றி கேள்வி கேட்க வேண்டிய அவசர அவசியமென்ன.. இந்த ஐந்தாண்டில் ஆடிய ரூத்ர தாண்டவத்தை பற்றி கேள்வி எழுப்பாததும் ஆச்சரியத்தை தரவில்லை ..
..
பணமதிப்பிழப்பு .. மாட்டிறைச்சிக்கா மனிதகொலை ..
நீட், ரஃபேல் ஊழல், தமிழ்நாட்டில் பெருபான்மை இல்லாத அரசை செயல்பட அனுமதித்தது .. இரண்டே இடங்களில் வெற்றிபெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்த அயோக்கியத்தனம் .. சிறுபான்மையினர் மீதான வன்மம் .. காந்தியையே தேச துரோகியைப்போல பேசும் பாஜகவினரை கண்டிக்காதது ஒரு சமூகத்தின் மீதான குரோத பார்வை .. மதமென்ற பெயரில் மோதல்கள் .. சாதிவெறியை தூண்டி ஆங்காங்கே சங்பரிவார்கள் தாண்டமாடியது ..தலித் மக்களின் மீதான கொடூர தாக்குதலை நாட்டின் பிரதமர் வாய்மூடி மௌனத்திருந்தது ஏன் .. நேருவையும் இந்திராவையும் விமர்சனம் செய்தது ஏன் .. விடுதலை போராட்டத்தில்
மன்னிப்பெழுதி தப்பித்துக்கொண்டவர்கள் தேசபக்தர்களாக சித்தரிப்பது ஏன் .. மதசார்பின்மைக்கெதிராக இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக பேசிவருகிறவர்கள் தேச பக்தர்கள் வேசம் போடுவதேன் .. ஆட்சி அதிகாரமிருக்கிறதென்ற பெயரில் எதிர்கருத்தை பரப்புகிறவர்களை தேச விரோதியாக ஆன்டி இந்தியன்களாக சித்தரிப்பது ஏன்
ஜனநாயக மரபுகளையெல்லாம் காலில் போட்டு மிதித்து
தான்தோன்றித்தனமாக சர்வாதிகார தோணலில் செயல்பட்டதேன் .. உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்குவந்து அரசின் தலையீடு நீதிபீடம் பாசிசத்தின் கடும் நெருக்கடியில் இருப்பதை சொன்னதை..
கடைசியாக நீங்கள் செய்த சாதனைகள் தான் என்ன…? இப்படி
நிறைய கேள்விகள் கேட்கபடாமலேயே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு ..
..
பிரதமர் முகத்தில் மகிழ்ச்சியில்லை அதிகாரத்தால்
ஆணவத்தை ஒரு சாராருக்கு பலனளிக்கும் திட்டங்களை செய்து பிற சமுதாய மக்களை அவர்களின் தாழே நிறுத்த வேண்டுமென்ற பிராமணீய போக்கை நடைமுறைபடுத்த எண்ணி வெகு மக்கள் முன் தோற்று நிற்கும் ஒரு பிரதமராய் தெரிகிறார் மோடி .. 2014 ல் 56 இன்ச் ஆக தெரிந்தவர் 5.6 இன்சாக மக்கள் முன் நிற்கிறார்.. இந்தியா போன்ற மதசார்பற்ற பன்முக தன்மை கொண்ட நாட்டில் மோடியைப்போன்றவர்கள் வந்தால் என்ன நடக்குமென இந்த ஐந்தாண்டு சொல்ல்லியிருக்கிறது .. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது ..
மக்கள் ஒரே குரலாய் ஒலிக்கிறார்கள்
bye ..bye.. Modi..