Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

புதுச்சேரியில் 9 வயது சிறு பாலியல் வன்கொடுமை

Posted on May 17, 2019May 17, 2019 By admin No Comments on புதுச்சேரியில் 9 வயது சிறு பாலியல் வன்கொடுமை

புதுச்சேரி:

புதுச்சேரியில் ரீடிங் எடுக்க சென்றபோது வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை மின்துறை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி அருகே அபிஷேகப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 26). புதுச்சேரி அரசின் மின்துறை ஊழியரான இவர் வீடு, வீடாக சென்று மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுத்து பில் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி வினோத் பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வினோத் மின் மீட்டர் ரீடிங் எடுத்தபோது, அந்த வீட்டில் 9 வயது சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டார். இதனையடுத்து சிறுமியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று வினோத் கேட்க, அந்த சிறுமியும் தண்ணீர் எடுத்து வர வீட்டின் உள்ளே சென்றுள்ளார்.அப்போது பின் தொடர்ந்து சென்ற வினோத் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த சிறுமி கூச்சலிட்டபோது, யாரிடமாவது இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு வினோத் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலா சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாகூர் காவல்நிலைய போலீசார் வினோத்தை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Genaral News

Post navigation

Previous Post: சென்னை விமனநிலையத்தில் நிலையத்தில்தலைவர் கோ செய்தியாளர் சந்திப்பில்தெரிவித்த கருத்துகள்
Next Post: இன்றைய செய்திகள்

Related Posts

களவாணி -2 பஞ்சாயத்து விரைவில் முடிவுக்கு?????????? Genaral News
இன்றைய இரவு செய்திகள் Genaral News
சென்னையில் இன்று மாலை கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா Genaral News
Seeing The Walkaroo Vision Seeing The Walkaroo Vision Genaral News
உலகின் மிகப்பெரிய தேசிய கீதத்தை மீளுருவாக்கம் செய்கிறார் பரத் பாலா உலகின் மிகப்பெரிய தேசிய கீதத்தை மீளுருவாக்கம் செய்கிறார் பரத் பாலா Genaral News
Prepare for a Spooky Halloween Weekend for Kids at Phoenix Marketcity Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme