ஜாமீன் வாங்கியது ஏன்…? கமல்ஹாசன் விளக்கம்…!
கைது நடவடிக்கையை கண்டு முன்ஜாமீன் கோரவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளதாக குறிப்பிட்டார். இந்துக்கள் தொடர்பாக தான் பேசியதை தலை, வால் வெட்டப்பட்டு ஒளிபரப்பி உள்ளதாக தெரிவித்த அவர், இந்த பிரச்சனை உருவாகவில்லை, உருவாக்கப்பட்டது எனவும் குற்றஞ்சாட்டினார். தன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் ஏற்படும் என குறிப்பிட்ட அவர், சூலூரில் தான் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்திருப்பதிலும் அரசியல் உள்ளது என தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு தான் பதில் சொல்ல தேவையில்லை எனவும், உண்மை குறித்து சரித்திரம் அவருக்கு பதில் சொல்லும் என்றும் கமல் தெரிவித்தார். இந்துக்கள் யார் என்றும், ஆர்.எஸ்.எஸ்.யார் என்பது குறித்து பிரித்து பார்க்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், தான் பேசியதால் காந்தியை பற்றிய நல்ல தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் கூறினார். நாக்கை அறுக்க வேண்டும் என்ற அமைச்சர்
ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கமல், அது அவரது குணாதிசயத்தை காட்டுவதாக பதிலளித்தார்.