வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, முழு திரைக்கதையை தன்னிடம் காட்டினால் தான் படப்பிடிப்புக்கு செல்ல முடியும், என்று தயாரிப்பாளர் கூற, அதற்கு வெங்கட் பிரபு, “அந்த பழக்கம் தனக்கு இல்லை” என்று கூற, படம் டிராப்பாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
ஆனால், அதை மறுத்த படத்தின் தயாரிப்பாளர் விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம், டிராப் என்பது வெறும் வதந்தி தான், என்று விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
என்ன பிரச்சினை என்று இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றாலும், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இப்படி தள்ளி போவது, சிம்பு ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.