Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சர்ச்சை- கல்வெட்டில் ஓபி.எஸ் மகன் எம்.பி என்று பொறிக்கப் பட்டதால்

Posted on May 17, 2019May 17, 2019 By admin No Comments on சர்ச்சை- கல்வெட்டில் ஓபி.எஸ் மகன் எம்.பி என்று பொறிக்கப் பட்டதால்

சர்ச்சை- கல்வெட்டில் ஓபி.எஸ் மகன் எம்.பி என்று பொறிக்கப் பட்டதால்.

மதுரை: “இன்னும் புள்ளையே பொறக்கல.. அதுக்குள்ள பேர் வெக்கிறதை பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்களே” என்று சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்வோம்! ஆனா ஓபிஎஸ் மகன் விவகாரத்தில் இது நடந்தே போச்சு. ஆமா.. பிள்ளையின் பெயரை கோயில் கல்வெட்டிலேயே செதுக்கி வெச்சாச்சு.. அதுவும் எப்படி.. எம்.பி. என்று போட்டு!இந்த தேர்தலில் ஓ. ரவீந்திரநாத் குமாருக்கு எப்படியாவது அரசியலில் ஒரு எதிர்கால வாழ்வை உண்டாக்கி தந்துவிட வேண்டும் என்று ஒரு முடிவோடு இருப்பவர்தான் ஓபிஎஸ்! இதற்காக முதலில் எம்பி சீட்டை வாங்கி தந்துவிட்டார். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, மகனுக்காக குடும்பத்துடன் தேனியில் பிரச்சாரம் செய்துவிட்டு, அதுக்கு அப்புறம்தான் அதிமுகவின் மற்ற வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய கிளம்பினார்.இது அக்னிப் பரிட்சை.. அமைதியாக இருங்கள்.. அரவக்குறிச்சி தாக்குதல் குறித்து கமல் டிவிட்!பிரதமர் மோடிதமிழக பாஜக தலைவர் தமிழிசையே தூத்துக்குடியில் வேட்பாளராக நின்ற போதும், அவரது கட்சிக்காக செல்லாமல், மாற்று கட்சியில் ஓபிஎஸ் மகனுக்காக தேனிக்கு பிரச்சாரத்திற்கு சென்றார் பிரதமர் மோடி! இந்த இடத்தில் இருந்தே ஓபிஎஸ்-ன் வியூகம் தடம் மாற ஆரம்பித்தது.கோயில் கல்வெட்டுஇதன்பிறகு வாரணாசிக்கு மகனை அழைத்துபோனார். ஏன் போனார், என்ன பேசினார், என்பது இதுவரை வெளியே வரவல்லை. இவ்வளவும் மகனுக்காக தந்தை முன்னெடுத்து வரும் காரியங்கள். இதில் இன்னொரு விஷயமும் சேர்ந்துள்ளது. கோயில் கல்வெட்டிலும் மகனின் பெயர் இடம்பெற்றுள்ளது. பெயரை விட அவருக்கு எம்பி பதவியை அதற்குள்ளாகவே கோவில் நிர்வாகம் கொடுத்துள்ளதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.குச்சனூர் கோயில்தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில், சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்திலேயே காசி ஶ்ரீ அன்னபூரணி கோயிலும் உள்ளது. நேற்று இந்தகோயிலில் கும்பாபிஷேகம். கோயிலுக்கு உதவி புரிந்தவர்களின் பெயர்களில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ஜெயபிரதீப் குமார், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.எம்பி ரவீந்திரகுமார்ஒரு குடும்பமே கோயிலுக்கு உதவி புரிந்துள்ளதால், இப்படி பெயர்களை பொறித்துள்ளார்கள் என்று எடுத்து கொண்டாலும், ரவீந்திரநாத் பெயருக்கு முன்னால் இருந்த அந்த வார்த்தைதான் எல்லோருக்கு ஷாக் தந்தது. “தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்” என்று பொறிக்கப்பட்டிருந்தது.அதிர்ச்சிஇன்னும் தேர்தலே முழுசா முடியல, வாக்கும் எண்ண ஆரம்பிக்கல, முடிவு எப்படி இருக்க போகுதோ தெரியல, ஆனால் அதுக்குள்ள தேனி எம்பி ரவீந்திரநாத் பெயர் எப்படி போட்டார்கள், இதுக்கு கோயில் நிர்வாகம் எப்படி அனுமதி தந்தது என்றெல்லாம் தெரியாமல் தேனி மாவட்ட மக்கள் குழம்பி உள்ளனர்.

Genaral News

Post navigation

Previous Post: மக்களை அலட்சியப்படுத்தியவர்கள் மக்களாலேயே வீழ்த்தப்படுவர்.. மோடியை தாக்கிய தேஜஸ்வி
Next Post: சென்னை விமனநிலையத்தில் நிலையத்தில்தலைவர் கோ செய்தியாளர் சந்திப்பில்தெரிவித்த கருத்துகள்

Related Posts

Apple_iPhone_11_Pro_www.indiastarsnow.com இந்தியவில் அறிமுகம் iPhone 11-ன் குறைக்கப்பட்ட ஐபோன்கள் விலை Genaral News
Ciel Group Announces Major Developments Ciel Group Announces Major Developments Genaral News
தமிழகத்தில் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது Genaral News
Chinas-Hubei-province-reports-2447-new-cases-of-the-deadly_indiastarsnow.com சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 630 ஆக உயர்வு Genaral News
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Genaral News
சென்னையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme